உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தத் தைரியம்

31


பிரச்னையை, அவர் புரிந்து கொண்டிருக்குமளவு, நமது உடன் பிறந்தவர் உணரவில்லையே என்பதை எண்ணியே உளம்வாடுகிறோம்.

ஆரியரின்றி நாம் நாடாளமுடியும் ! தமிழர் மட்டுமே என்றால் அதுவே உண்மையான பொருள். ஆச்சாரியாரும் அவருடைய சீட கோடிகளுங்கூட அதை அறிவர். வேண்டுமென்றே மன்றங்களிலே பேசுவர், தமிழர் என்றால் தமிழகத்திலே பிறந்து, தமிழ்பேசும் அனைவரும் தமிழரே என்று. ஆனால் உள்ளூர உணர்வர், தமிழர் என்றால், தமிழ்மொழியினர் என்பது மட்டுமல்ல, மொழி, விழி, வழி, மூன்றிலும் தமிழர் ! நோக்கம் நெறி இரண்டும், (விழி, வழி) தமிழருக்குத்தனி ! ஆரிய நோக்கம் வேறு, மார்க்கம் வேறு! தமிழர், எனில் தனி இனம் என்ற கருத்தே தவிற, மொழியிலே மட்டுமல்ல! எனவே ஆச்சாரியார் தமிழர் மட்டுமே என்று கூறினதன் பொருள், ஆரியரின்றிக், தமிழர் மட்டுமே இன அரசு நடத்தமுடியும் என்று விரியும். இதைத்தான் உண்மையில் பெரியார் விரும்புகிறார். ராமஸ்வாமி நாயக்கருக்குத் தைரியமிருக்கிறது !—என்று கூறும் ஆச்சாரியார், எப்படி அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறாரோ, இல்லையோ நாமறியோம். எனினும் அந்தத் தைரியம் இருப்பதற்குள்ள காரணத்தைக் கூறவிரும்புகிறோம். எதிர்த்தரப்புக் கானவைகளையே முதலிலே எடுத்தாராய்வோம். தமிழர் என்பதற்கு இன்று எதிர்த்தரப்பினர் கூறக்கூடிய குறைபாடுகள் ஏராளம்.

எப்படிப்பட்ட தமிழர் ? ஜாதியால் மதத்தால்