உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

விடுதலைப் போர்


பேதப்பட்டுக் கிடக்கும் தமிழர்! கல்வியிலே பிற்போக்கடைந்துள்ள தமிழர் ! கண்டவன் கைபிடித்திழுக்கும் கேவல நிலைக்குவந்துவிட்ட தமிழன் ! தரணி இழந்து பரணி மறந்து, தாசனாகி ஏசுதலைத் தாங்கித் தவிக்கும் தமிழன் ! வளமிழந்து, களம்மறந்து, வாழ்வுகசந்து தாழ்வடைந்துள்ள தமிழன்! மொழிசிதைந்து, பழி மிகுந்து, கழிகொண்டோன் காட்டும் குழியிலே குதித்திடும் குணம் கொண்ட தமிழன்! வாணிபம் இழந்து, அரசு இழந்து, அணைந்த விளக்காய், கவிழ்ந்த கலமாய், தூர்ந்த அகழாய்க் கிடக்கும் தமிழன் ! ஆங்கிலேயனுக்கு அடிமை, ஆரியனுக்குத் தாசன், வடநாட்டானுக்கு எடு பிடி, எனும் வெட்கமுறத்தக்க நிலைபெற்ற தமிழன் ! கூலியாகி வெளிநாடு செல்லும் ஏழை ! காலிலே பிறந்தோம் கர்மவினையை அனுபவிக்கிறோம் என்று கருதும்கோழை ! நம்மால் ஆகாது, நாதன் விட்டவழி என்று நம்பும் நடைப்பிணம் ! ஆம் ! இன்றையத் தமிழன், வாள் ஏந்திய கரத்தோடில்லை, ஆரியனின் தாளேந்திக் கிடப்பவன்! அவனிடம் இன்று செங்கோல் இல்லை, ஒரு ஜாதிக்கு மற்றோர் ஜாதி எந்த அளவு உயர்வு, அல்லது மட்டம் என்பதைக் கண்டறியும் அளவுகோல் வைத்துக்கொண்டிருக்கிறான் ! தன் இனம் பிறஇனம், தன்மொழி பிறமொழி எனும் பாகுபாடுணரமுடியாத நிலையிலே உள்ளான் தமிழன் ! நெஞ்சு உரத்தை மங்கவைத்துக்கொண்டிருக்கிறான் தமிழன் !

ஆரியருக்குக் களிப்பூட்ட இந்தப் படப்பிடிப்பு போதும் என்று கருதுகிறோம்; போதாதெனில்