உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தத் தைரியம்

33

இன்னமும், சிலபல சேர்த்துக்கொள்ளட்டும். நாம் மறைக்காமல் கூறுகிறோம்; இன்றையத் தமிழர் இழி நிலையிலே உள்ளனர்; இம்மியும் இதிலே எமக்குச் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட தமிழரைக்கொண்டுதான், தனி அரசு அமைக்கமுடியும் என்று பெரியார் கருதுகிறார்; ஆச்சாரியார் மொழியிலே கூறுகிறோம், "ராமஸ்வாமி நாயக்கருக்குத் தைரியம் இருக்கிறது."


எப்படிப்பட்ட தமிழர் என்பதை விளக்கினோம். இனி, ராமஸ்வாமி நாயக்கர் எப்படிப்பட்டவர், என்று எதிர்த்தரப்பினர் கூறக்கூடும், என்பதை அவர்களுக்கு வேலை வேண்டாம் என்பதற்காக நாமே கூறுகிறோம். எப்படிப்பட்ட ராமஸ்வாமி நாயக்கர் ?

கல்லூரி காணாத கிழவர் ! காளைப்பருவ முதல் கட்டுக்கடங்காத முரடர்! அரசியல் நோக்கத்துக் கான முறையிலே கட்சி அமைப்பு இருக்கவேண்டு மென்று அறியாத கிளர்ச்சிக்காரர்! பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாகப் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்பவேண்டும், என்று யூகமாக நடந்து கொள்ள மறுப்பவர்! யார்யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்! கவர்னரைக் காணவேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அற்றவர்! தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்! ஆரியமதம், கடவுள் எனும் மூடுமந்திரங்களைச் சாடு வதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்

729-3