உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

விடுதலைப் போர்


கினரின் இசைக்குக் கட்டுப்பட மறுப்பவர். ஆம்! ராமசாமியின் கட்சியிலே தோட்டக்கச்சேரி கிடையாது ! முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது. லண்டன்கிளை கிடையாது, லட்சாதிபதிகளின் 'பிட்சை' கிடையாது ! சாமான்ய மக்களின், இது அரசியல் இதுமதம், என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிகமிகச் சாதாரண மக்களின் கூட்டுறவைமட்டுமே பெற்றவர்! தேர்தலா? வேண்டாம் ! பதவியா ? கூடாது ! துரைமார் தயவா ! தூ! அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி ! என்றெல்லாம் கூறுகிறார். சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலருகிறது கிளர்ச்சி என்ற கருத்து இனிக்கிறது, இந்தக் கிழவருக்கு! இவ்வளவு வயதாயிற்று இவ்வளவு வருஷங்களாகப் பொதுவேலை செய்தார். ஒரு சர் பட்டம் பெற்றாரா, ஜினிவா போனாரா (சர்க்கார் செலவில் !) அமெரிக்கா போனாரா (அரசாங்கத்தின் செலவில் !) எதைக்கண்டார்! எட்டுமுறை சிறைக்கோட்டம் போய்வந்தார்! இவர் தானய்யா ராமஸ்வாமி நாயக்கர்!

இதைவிட அதிகமாக மயிலைவாசிகளின் மனத் திலே தோன்றமுடியாது என்று நம்புகிறோம். தோன்றினால் கூட்டிக்கொள்ளக் கோருகிறோம். ஏனெனில், எதிர்த்தரப்பினருக்கு முழுச்சலுகையும் கொடுத்து விடத் துளியும் நாம் தயங்கவில்லை. சற்று தாராளமாகவே கூடத் தருகிறோம்.

தாசரான தமிழர், கிழவரான கிளர்ச்சிக்காரர் !! சரி ! இப்படிப்பட்ட ராமசாமி இப்படிப்பட்ட தமிழரைக்கொண்டு, எப்படிப்பட்ட காரியம் செய்யமுடி-