உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

விடுதலைப் போர்


கிறான்! உப்புநீரிலிருந்து முத்து எடுக்கிறான்! காட்டிலிருந்து வாசனை எடுக்கிறான் ! விஷத்தைப்போக்கி விளையாட்டுக் கருவியாக்குகிறான் ! எதைச் செய்யாமலிருக்கிறான் அம்மாயாவி ! தோலைத் தட்டுகிறான் நாம் களிக்கிறோம், நரம்புகளைத் தடவுகிறான் நாம் நாதவெள்ளத்தைப் பருகுகிறோம், என்னமோ கூறுகிறான் அது நம்மை ஏதேதோ உணர்ச்சிகளில் கொண்டுபோய் ஆழ்த்துகிறது; இவை இசைவாணனாம் மாயாவியின் செயல்!

இதனால் இது ஆகுமோ, என்ற கேள்விக்கு. இடமுண்டோ இங்கு ? மண்ணிலே தங்கம் ஏது? கடலிலே முத்து ஏது ? தட்டுத் தடவலிலே இன்பம் ஏது? வர்ணத்திலே சிருஷ்டி ஏது ? எப்படி முடியும்? என்று, தொழிலாளி, இசைவாணன், ஓவியக்காரன் ஆகியோரைக் கேட்டால், அவர்கள் நகைப்பர்! "என்னே இவன் குறைமதி!" என்று எள்ளி நகையாடுவர். மண்ணுக்குள்ளே நெடுந்தூரத்திலே புதைப்பட்டுக்கிடக்கும் பொன் இருக்குமிடமும் எடுக்கும் விதமும் பாட்டாளி அறிவான். தெரியாதான், இதிலே இதுவா,எப்படி? என்று கேட்பான். பெரியார் ராமசாமியின் பெரும்பணி இது போன்றதே. அவர் அறிவார், தாசராக உள்ள தமிழர், தரணி ஆண்டவர் என்பதும், தரணி ஆண்டகாலத்திலே தன்மானத்தை ஓம்பினர் என்பதும், மானத்தையும் உரிமையையும் பெரிதெனக்கொண்ட தமிழரிடை, ஜாதிப்பித்தம், வைதீகவெறி, அடக்கியாளும் ஆணவம், சுரண்டிப் பிழைக்கும் சூது ஆகியவைகள் கிடையா என்பதும், களத்திலே கடும்போரிடும்.