உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தத் தைரியம்

37


வீரர்கள் கபடரின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்று விட்டால், தமிழ் இனம் தாசரானதற்குள்ள காரணத்தைக் கண்டறிந்து விட்டால் அவர்கள்

"கொலை வாளினை எடடா மிகுகொடியோர் செயல் அறவே" என்று முழக்கமிட்டுக் கிளம்புவர் என்பதும், தமிழ்ரின் இன்றைய நிலை தாழ்வுடையது இடர்மிகுந்தது என்றபோதிலும், தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கிவிட்டால், களை எடுத்த வயலாவர், விழித்தெழுந்த வேங்கையாவர், என்பதும், பெரியார் அறிவார். மணி, மேலே மாசு! மடு, மேலே பாசி ! வயல், இடையே களை ! தமிழர், அவர்களுக்குள் தகாதாரின் கூட்டுறவு ! மாசுதுடைத்திடுக, பாசிபோக்கிடுக, களை நீக்குக, கபடரின் பிடியைப் போக்குக, என்று கனிவுடன் கூறுகிறார், சுடமை வழிநிற்கும் கிழவனார். அதுமட்டுமல்ல ! எங்ஙனம், பிறர் முடியுமா என்று கேட்கும்போதும், உண்மையாகவே செய்ய முடியாதிருக்கும்போதும், ஓவியக்காரனும், இசைவாணனும், தமது திறமையினால் இன்பத்தை அளிக்கின்றனரோ, அதுபோல, இவ்வளவு தாழ்நிலை அடைந்துள்ள தமிழரைக்கொண்டு தனி அரசு அமைக்கமுடியுமா என்றுபலர் எண்ணும் போது, தமிழரின் அந்நாள் நிலையும் இந்நாள் நிலையும் தெரிந்ததோடு மட்டுமின்றி, காலவேகம் கருத்து வேகம், பொதுவாகவே மக்களிடை உள்ள விழிப்பு ஆகியவற்றையும் அறிந்திருக்கும், "ரசனைக்காகவோ," சொற்பெருக்காற்றவோ, மட்டும் பயன் படும் அறிவாக அதனைக்கொள்ளாமல், மக்கள் விடு-