உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

விடுதலைப் போர்


கூற அஞ்சுகிறார்கள். ஒரு பெரியாருக்கு இந்தத் தைரியம் இருக்கிறதே நமக்கு ஏற்படவில்லையே என்று வெட்கமும் அடையாமல், இருபது வருஷம் கூட்டு மந்திரி சபை வேண்டும், என்று கூசாது நீட்டுகின்றனர் திரு ஓடு ! திரு இடமே ! இந்தத் தீரமிலாதார் திருந்தும் இடம் ஏதேனும் உண்டா? ஏன், ஆச்சாரியார் பெரியாருக்கு இருப்பதாகக் குறிப்பிடும் அந்தத் தைரியம் இவர்களுக்கு, சர்களுக்கு இல்லை?

திருமுகம்

நம் நாடு, "திராவிட நாடு " ஒரு காலத்தில் பரந்த சாம்ராஜ்யமாக இருந்தது. இன்று நாம், பழைய அளவு முழுவதும்கூடக் கேட்கவில்லை. சென்னை மாகாணம், என்ற எல்லையுள்ள இடத்தைக் கொடுத்தாலே போதும் என்று கூறுகிறோம். திராவிட நாடு என்ற திருப்பெயருடன், அதிலே நாம் தன்னாட்சி அமைக்க விரும்புகிறோம்.

திராவிட நாட்டின் அளவு, சிறியது என்று கூறிவிட முடியாது. இந்தியாவிலே ஒரு இணைப்பாக இருக்கும் நிலையிலே பார்த்தால், அப்படித் தோன்றும்; ஆனால் உலகிலே, தன்னாட்சியுடன் உள்ள பல்வேறு நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், திராவிட நாடு அளவில் சிறியது ஒன்று கூறி விட முடியாது.

சென்னை மாகாணத்தின் அளவையே நாம் இப்போது திராவிட நாடு என்று கொள்கிறோம். இந்த அளவு 142000,