உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

விடுதலைப் போர்


மொழிப்படி நடப்பதே அரசதர்மம் என்ற எண்ணம் பலமாக இருக்கிறது.

இந்த நாட்டிலே தான், நீங்கள் வாழுகின்றீர்கள் என்பது கவனமிருக்கட்டும்.

மரத்தாலான ஏர், மண்வெட்டி, கூடை, முறம், பாய்மரமுள்ள படகு, கயிற்றால் ஆன வலை, கட்டைவண்டி, கைராட்டினம், இவைகளைக் கண்டுபிடித்த அளவிலிருந்து, காற்றை அளக்கும் கருவி, காரிருளைப் போக்கும் மின்சாரம், கடலுக்குள் குடைந்து செல்லும் கலம், காதருகே உலகைக் கொண்டு வந்து சேர்க்கும் கருவி, இவைகளையும், இவைகளையும்விட அதி அற்புதமான முறைகளையும் கண்டு பிடித்த வெளி உலகு, எவ்வளவு வளர்ந்திருக்கிறது, அத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால், இங்கு நாம், எந்த அளவோடு நின்று இருக்கிறோம் என்று எண்ணிப்பாருங்கள்.

இந்த நாட்டிலே நீங்கள் "தீண்டாத மனிதனை"ப் பார்க்கிறீர்கள் ! இந்த நாட்டிலே "சேரிகளை"ப் பார்க்கிறீர்கள். இங்கே "தொடாதே ! எட்டி நில்!" என்று கூறும் பார்ப்பனரைப் பார்க்கிறீர்கள் ! அவன் வாழும் அக்ரகாரத்தையும் பார்க்கிறீர்கள் ! மேனி கருத்தவனை, மேனி மினுமினுப் புடையவன், உழைப்பவனை உறுஞ்சி வாழ்பவன் மிரட்டக் காண்கிறீர்கள். நாயும் பன்றியும் நடமாடினாலும் சகித்துக் கொள்பவர்கள், மனிதனை, "தாழ்ந்த குலம்" என்று வைத்திருப்பதைக் காண்கிறீர்கள்.

அதிகாரிகளை அடிமை கொள்ளும் அதிகாரி-