உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமுகம்

47


வும் கெடாதபடியும் பார்த்துக்கொள்ள ஏற்பாடுகள் உள்ளன. இங்கு 'வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மாந்தரென்றால் சூழ்கின்ற பேதம் அந்தத் தொகை இருக்கும்' என்ற நிலை இருக்கிறது.

மற்ற இடங்களிலே வீரர்களுக்குக் கோட்டம், இங்குக் கோட்டங்களிலே வீணருக்கே இடம்.

மற்ற இடங்களிலே அறிஞர்கள் போற்றப்படுவர்; இங்கு, ஆரியரன்றி அறிஞர் இலர் என்று எவன் ஒப்புக்கொள்கிறானோ அவனே அறிஞன்!

மற்ற இடங்களில் உழைப்புக்குப் பெருமை, இங்கு உயர்ந்தோன் உழைக்கலாகாது என்பது தான் நியதி.

மற்ற இடங்களிலே, பழைமைக்குக் கல்லறை, இங்கே புதுமைக்குச் சித்திரவதை.

இங்கு இன்றும் வேள்விகள், யாகங்கள், வேதபாராயணங்கள், குருபூஜைகள், அபிஷேகாதிகள், ஆராதனை வகைகள், யாவும் உண்டு. இவை யாவும், மனிதன் காட்டுமிராண்டிப் பருவத்திலே கற்றுக் கொண்டவைகள்; அறிவுக்காலத்துக்கு இவை ஆகா, என்று மற்ற இடங்களிலே விட்டு விட்டனர்.

மற்ற இடங்களிலே, ஜூவஸ், மினர்வா, அபாலோ, நெப்ட்யூன், தார், ஓடின், ஜுபிடர், முதலிய எண்ணற்ற "கடவுள்களை " வேலையினின்றும் நீக்கி விட்டனர். இங்கு இன்றும், காட்டேரி, முனியனைக்கூடக் கைவிடவில்லை.

மற்ற இடங்களிலே, அறிவாளியின் மொழியைக் கேட்டு அரசுகள் நடக்கின்றன ; இங்கு ஆரிய