உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

விடுதலைப் போர்


கொடுக்கிறது, என்றால் நம்புவரோ ! ஆரியர், தமிழருக்கு, மதம், கலை, நாகரிகம், சட்டம், யாவும் கற்றுக் கொடுத்தவர்; ஆரியமத கலை நாகரிகம் சட்டம் ஆகியவைகளைத் திராவிடர் ஏற்றுக் கொண்டுள்ளனர். வெற்றிபெற்ற ஆங்கிலேயனால், இந்திய பூபாகத்தைக் கிறிஸ்துநாடு ஆக்கமுடியவில்லை; வெற்றிபெற வாள் எடுக்காத ஆரியத்தால், திராவிடத்தை, ஆரிய சேவாபீடமாக மாற்றிவிட முடிந்தது. உலக வரலாறு முழுவதும் தேடினாலும் இதற்கு ஈடான வேறோர் கொடுமையைக் காண முடியாது.

இன்று, ஏக தெய்வம், உருவமற்ற ஆண்டவனை வழி படுவதே உயர்ந்தோர் மார்க்கம் என்பதை உலகு முழுதும் கொண்டாடுகிறது. இங்கு மட்டுந்தான், கடவுள்கள் கூட்டம் கூட்டமாக உள்ளனர்! எல்லாவித உருவங்களிலும் உள்ளனர் ! ஏக தெய்வ வழிபாட்டுக்காரர் குறைவற்ற வாழ்வு வாழ, கடவுட்கூட்டத்தைக் கட்டிவாழும் இங்கு, வாழ்வே பெருஞ்சுமையாகி, 'பிறவா வரம் தாரும் பெம்மானே' என்று புலம்புகிறோம்.

மற்ற இடங்களிலே ஆண்டவன் வந்துவந்து போனதில்லை! இங்கு அடிக்கடி வந்து போயிருக்கிறார். ஒவ்வொரு தடவையும், பாபத்தைத் போக்கவே வந்திருக்கிறார்; வந்து போன பிறகு மீண்டும் மீண்டும் பாபம் தலையெடுத்து ஆடுகிறது.

மற்ற இடங்களிலே, மக்கள் யாவரும் சமம், ஒரு நாட்டிலுள்ளவர்கள் ஒரு தாயின் சேய்கள் என்ற எண்ணம்; எண்ணத்தோடு நில்லாமல் உறுதிப்பட-