உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

விடுதலைப் போர்


பதானால், அந்தத் தொல்லையை ஒழிக்கப் பாடுபட்டால் போதும் என்று கூறுவது அறிவுடமையாகும். வண்டிக்கு அச்சு முறிந்திருக்கிறது, 'கழுத்துக்கட்டு' காணப்படவில்லை, சக்கரத்தில் கிளைகள் ஒடிந்து கிடக்கின்றன ! மாட்டின் கொம்புக்கு வர்ணம் பூசி விட்டால், வண்டி பூட்டி விட முடியுமா? நாட்டிலே உள்ள 'அடிமைத்தனம்' ஒன்றல்லவே ! குப்பை மேட்டின்மீது குரைத்துக் கொண்டிருக்கும் நாயைக், குறிபார்த்து அடிக்க வேண்டுமானால் நமக்கும் கொஞ்சம் உயரமான இடம் வேண்டுமே, நின்று கொண்டு கல்வீச ! கைவலிக்கப் பல கல்வீச வீச, குப்பை மேட்டிலே, ஒரு இடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு நாயும் நகர்ந்து கொண்டிருக்குமே ! தப்பித்தவறி ஓடினாலும், கல் வீசும் சத்தம் நின்றதும், குக்கல் மறுபடி வந்து சேருமே ! அடிமை மனப்பான்மை என்ற குப்பை மேட்டின்மீது குடி ஏறிஇருக்கும் அரசியல் அடிமைத்தனத்தை ஓட்ட, கிளர்ச்சி என்னும் கல்வீசிக் கண்டது என்ன? குப்பை மேட்டைக் கலைத்துவிட்டால், குக்கல் தானாகப் போய்விடுமே ! சமூகக் கொடுமையை ஒழிக்கத்தொடங்கினால் அல்லவா, குப்பை மேடு குலையும். எத்தனை காலத்துக்குத்தான் 'தேசியத் திரை'யினால், சமூகக் கொடுமைகளை மக்கள் அறிய ஒட்டாதபடி தடுத்துவைக்க முடியும் !

விசித்திர வைதிகர்களை வீதி சிரிக்கச் செய்தார் சாக்ரடீஸ்! உலகுணராதவர்களுக்கு அது உருண்டை என்று உரைத்து உதைபட்டார் கலிலியோ ! வைதிகத்தின் மடமையை வாட்டினார்