உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமுகம்

51


வால்டேர் ! மக்கள் மன்றத்துக்கு மதிப்புதர வேண்டும் என்றார் ரூசோ. வேத புத்தகத்தை விற்று விபசார விடுதிக்குப் பணம் தரும் போகிகளைக் கண்டித்தனர், விக்ளிப், ஜிவிங்கிலி, மார்ட்டின் லூதர் போன்றார். அடிமைகளை விடுவித்தார் ஆபிரகாம் லின்கன். முதலாளியின் கொடுமையை எடுத்துரைத்தார் காரல் மார்க்ஸ்; அவர்களுக்காகப் போராடினார் லெனின்; சீனரின் சிறுமதியைப் போக்கினார் சன்-யாட்-சென்; துருக்கியரின் மதி தேய்வதைத் தடுத்தார் கமால்; இறைவன் பெயர் கூறி ஏழையை வஞ்சித்தவரைச் சந்தி சிரிக்கவைத்தார் இங்கர் சால்; பேதைமையைப் போக்கும் பணியை மேற்கொண்டார் பெர்னாட்ஷா! வாழ்க்கையிலே வாட்டம் வேதனை, வறுமையின் கொடுமை, வஞ்சகத்தின் ஆட்சி இவைகளிருப்பதைப் படம் பிடித்துக் காட்டினர், கோர்க்கி, டர்கினாவ், டாஸ்ட்டாவஸ்கி, சிங்களேர், போன்ற எண்ணற்றவர்கள். இவர்களும் இன்னமும் எண்ணற்றவர்களும் தோன்றித் தொல்லைப்பட்டு, தூற்றப்பட்டு, கொடுமைக்கு ஆளாகி, மனித சமாஜத்தின் மறு மலர்ச்சிக்காக, கொள்கைகளை, புதுக் கோட்பாடுகளை, எவருக்கும் எதற்கும் அஞ்சாது எடுத்துக் கூறிப் பாமரனுக்காகப் போராடியதால், இன்று பல்வேறு நாடுகளிலே, மக்களின் மனம் விடுதலை பெற்றது. அடிமை மனப்பான்மை அகன்றது. அதனால் அங்கு, ஒரு நாட்டை இன்னோர் நாடு அடக்க முடியவில்லை ! அடக்கினால், எரிமலை கக்குகிறது, மக்கள் மனமென்னும் கடல் பொங்கி வழிகிறது; புரட்சிப்புயல் வீசுகிறது. அதன் முன்பு, எந்தக்-