உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வீரர் வேண்டும்


"சுயமரியாதைக் கோட்பாடுகளை, ஜஸ்டிஸ் கட்சியிலே புகுத்திவிடுகிறார்களே ! அரசியலிலே மதத்தைக் கலந்துவிடுகிறார்களே ! அரசியல் கட்சியிலே, பலமதத்தினர், பல ஜாதியினர், பல வைதிகர்கள் இருப்பார்கள், அனைவருக்கும் அரசியல் கட்சிபொதுவாக இருக்க வேண்டுமேயல்லாமல், மதவிஷயத்திலே குறுக்கிட்டுப் பலரைக் கட்சியைவிட்டு விலகும்படி செய்யலாமா, கட்சிபலவீனமடைந்து விடாதா காரியம் கெட்டுவிடாதா?" என்று சிலர் கசிந்துருகுக்கின்றனர். இந்தப் போக்கினரிலே பலர், எதையோ எண்ணிக்கொண்டு வேறு எதையோ பேசுகிறார்கள் பட்டம் பதவியை எண்ணிக்கொண்டு, அதனை வெளியே எடுத்துப்பேசினால் வெட்கக்கேடாக இருக்குமே என்று அஞ்சி, கட்சியிலே தமக்கு இருக்கும் அளவிடமுடியாத அன்புப் பெருக்கினாலேயே அரசியலும் மதமும் வேறுவேறாக இருக்கவேண்டுமென்று கூறுவதாகப் பேசுகின்றனர். இந்தப் போக்கு கொண்டோரிலே, ஒருசிலர் உண்மையாகவே, அரசியல் கட்சியிலே மதப்பிரச்னையைக் கலக்கலாமா என்பதிலே சந்தேகமும் அதன்பயனாகச் சஞ்சலமும் கொண்டுள்ளனர். அந்தச் சிறு தொகையினரின் உண்மையான உள்ளக்கிளர்ச்சியை நாம் மதிக்க கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் உள்ளன்டை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர்கள், தம்மையும் அறியாமல் அரசியலை இலாபச் சூதாட்டமாகச்