உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமுகம்

55


மார்வார் கம்பெனி தயாரிக்கும் மாத்திரையையும் உட்கொண்டு, வீணராய், வறிஞராய், திராவிடர் ஆகிவிடக் கூடாது.

ஆகவேதான், "'திராவிடநாடு திராவிடருக்கே' என்று முழக்கமிடுங்கள் ; உரிமைக்காகப் போராடுங்கள்" என்று கூறுகிறோம். திராவிடநாடு, நம் நாடு; நல்ல வளமுள்ள நாடு; தன்னாட்சிக்கு ஏற்ற நாடு; அதனைப் பெற, அதிலே தன்னாட்சி தழைக்கப், பணிபுரிவதே, திராவிட வாலிபன் இன்றையக் கடமை. இதற்கு முன்பு வேறு என்றும் இல்லாத அளவுக்கு இக்கடமை இன்று நம்மை அழைக்கிறது. இது விடுதலைப் போர்க்கோலம் ! வீணருக்கு உழைத்து வீழும் காலம் அல்ல !

இந்நாளில் வாழும் நீங்கள் திராவிட விடுதலைப்

போர்ப் படையின் முன்னணி வீரர்கள். உங்களுடைய முன்னேற்றைத்தைப் பொறுத்தே படையின் வளர்ச்சியும், வெற்றியும் இருக்கிறது. எனவே வீரர்காள், முரசு கொட்டுக ! "வளமார் எமது திராவிடநாடு வாழ்க ! வாழ்கவே !!"