உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

விடுதலைப் போர்


குடையின் கீழ்வரவேண்டும் என்று கூறுகின்றனவா? திராவிடத்தை மட்டும், தனிநாடு ஆகக் கூடாது என்று கூற யாருக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது? என்ன நியாயம் இருக்கிறது? மேலும், திராவிடநாடு, தன்னாட்சியோடு, தனி நாடாக இருந்ததுதானே? இழந்த இன்பத்தைத்தானே மீண்டும் கேட்கிறோம்? இது எந்தத் தர்மத்துக்கு விரோதம்?

"இந்தியா" பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தினிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால் அந்த விடுதலை மட்டும் போதாது. இனத்தை இனம் அடக்கிக் கொடுமை செய்வதினின்றும் ஒவ்வோர் இனமும் விடுதலை பெறவேண்டும். முதலாளித்து முறையீலிருந்து மக்கள் சமுதாயம் விடுதலை பெறவேண்டும். வைதிகப் பிடியிலிருந்து விடுதலை பெறவேண்டும். பழைய கால எண்ணம் ஏற்பாடுகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். இவைகளுக்குப் பாதகமாக உள்ள சூழ்ச்சி, சுயநலம், பசப்பு, புரட்டு இவை யாவும் ஒழிந்தாக வேண்டும். ஆங்கிலேயனை அதட்டிக் கேட்கப் பயிற்சிபெற்று விட்டோம்; அவனும் இந்தியா, இனித் தங்கக் கம்பியாக இராது, அது தணலில் போட்டெடுத்த இரும்பு என்பதைக் கண்டுகொண்டான். ஆனால் 'விடுதலைப்போர்' ஒரு சிறையிலிருந்து மற்றோர் சிறை செல்வதல்ல. வெள்ளை ஏகாதிபத்யத்தை விரட்டி வேதியமடாதிபத்யத்திலே மாட்டிக் கொள்வது, விடுதலை அல்ல ! பரங்கியின் பிடியிலிருந்து விலகி பனியாவின் பிடியிலே சிக்கிக் கொள்வது, விடுதலை அல்ல. இந்திய விடுதலை என்ற இனிப்புப் பூச்சின் சுவையைக் கண்டு, மனு,