பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதுபாண்டியன்

19

இரா திரிக்கு உணவாக ஆவியூர் அளித்திட்டான்

பதிப்பித்துக் கொண்டபற் றிலேதிருக் கானத்தைப்

புதுப்பித்தான் புதுப்பித்தால் பெருந்தேர் உருட்டினான்

வீரக் கொடுவாள் விளையாடிச் சிவப்பேறிய

ஈரக் கையினால் வாரிக் கொடுத்துவந்த

மருதப்பன் நாடெங்கும் மக்களப்பன் ஆனவன்

ஒரு நாள் பசியால் ஒட்டிய வயிறோடு

களைப்பால் தடுமாறி களையப்பிய முகம்வாடி

மலைப்பால் சாய்ந்தான் மலைபோல் விழுந்தான்.

கீழே விழுபவனை ஓர்கிழவி ஏழையெனக்

கூழைக் கொடுத்தாள் கூழைக் குடித்தவனோ

“தாயே பெயரென்ன? “எனத்தடுமாறிக் கேட்டானவள்

“தாயம்மாள்” என்றாள்! “தாய்அம்மாள் நீயே;

வாழக் கூழ்கொடுத்து வாழ வைத்தாய்

ஏழையா நீ? என்நெஞ்சே ஏழையம்மா” என்று

பாமூரில் காத்தஉன் பழுத்த அன்பிற்குக்

கூழுர்என இவ்வூரினிக் குறிக்கட்டும் எனச்சொல்லி

எழுதிக் கொடுத்துவிட்டு ஈரத்தால் போனவனை

வழுத்தி வைத்திருக்க வையத்தில் வாழுகின்றான்

‘மருது’எனும் பெயரால்! மதுரைக்கும், கொச்சையாய்

மருதைஎன வழங்கும் மதுரச்சொல் லால்பின்னே

கமுதிக் கோட்டைக்குள் கால்வைத்த பகைவரை

அமைதிக் கோட்டைக்கு அழைத்துப் போனான்

திருப்பூ வனத்தை விரும்பியவரைச் சாவூரெனும்

திருப்பூருக் கனுப்பிவிட்டுத் தீவாளைமுத்த மிட்டுச்

சாமியென ஊரவர் சாற்றும்படி சிவகங்கைப்

பூமியில் வீற்றிருந்தான். பொழுதுகள் மாறிப்

பெருவயல் எங்கும்ஒளி பெய்கின்ற காலையில்

சிறுவயலைத் தாக்கினர் சீறும்வய வேங்கை