பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
௩. பாரதி
[கவிஞர் முருகுசுந்தரம்]
நேரிசை வெண்பா

ஆரூர் அமுதே! அழகுத் தமிழ்பூட்டித் தேரூரத் தேர்ந்த கலையரசே!- பாரில் முரசொலிக்கும் முத்தாரப் பேச்சழகா! இங்கே அரசிருப்பாய்! யான்பாடு வேன்.

அறுசீர் விருத்தம்
குறும்பலாப் பழச்சுளையைக்
கொட்டுகின்ற தேனடையில்
நனைத்தோர் மந்தி
அருந்தென்று தானூட்ட
அதைக்குட்டி மறுத்ததனால்
அன்பே! நம்மூர்
நறுந்தமிழைப் போலினிக்கும்
நாவார் உண்ணென்று
சொன்ன பின்னர்
விருந்துண்டு கிளைதோறும்
அக்குட்டி விளையாடும்
திருநெல் வேலிச்