பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

விடுதலை வீரர்கள் ஐவர்


பாட்டுப் புலவர் நடத்திய இந்தியாப்
பத்திரிகை மேலே - ஆள்வோர்
நாட்டம் விழுந்ததந் நல்லிதழ் தன்னை
நசுக்க முடிவு செய்தார்

நாட்டினி லேஉயர் நாவல ராகிய
நல்லவர் பாரதியைச்--சிறைக்
கூட்டுக்குள் ளேதள்ளிப் பூட்டிட வெள்ளையர்
கூடிச் சதிபுரிந்தார்.


வேறு


புலவர் பாரதியைச்--சிறையில்
பூட்டி அடைத்து விட்டால்
கலைத் தொண்டழியு மென்றே- நண்பர்கள்
கருத்துக் கொண்டார்கள்

சிங்கப் பாவலனைப்-புதுச்
சேரிக் கனுப்பி வைத்தார்
மங்கை யர்க்கரசி செல்லம்
மாளும் புறப்பட்டார்

வங்கப் பெரு நாட்டில்--இருந்து
வந்த அரவிந்தர்
அங்கு வாழ்ந்திருந்தார்-வாவேசு
அய்யரும் இருந்தார்

வரிப்புலி பாரதியும் - இவ்
வறிஞருடன் சேர்ந்தார்
நெருப்பில் நெருப்பானார் - வாளை
நிமிர்த்துப் பிடித்து விட்டார்