பக்கம்:விடையவன் விடைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடையவன் விடைகள்

இலக்கண இலக்கியம்

1. அரிமா நோக்கு’ என்பதை விளக்குக.

சிங்கத்தின் பார்வை என்பது இந்தத் தொடரின் பொருள். இலக்கண நூல்களில் ஒரு சூத்திரத்தின் பொரு |ளுக்கும் வேறு சூத்திரத்தின் பொருளுக்கும் இ ைட யே உள்ள தொடர்பை நான்கு வகையாகப் பிரித்துக் கூறுவர். அவற்றில் ஒன்று அரிமா நோக்கு. ஒரு குறிப்பிட்ட சூத்திரம் தனக்கு முன் உள்ளவற்ருேடும் பின் உள்ளவற்ருேடும் தொடர்புடையதாக இருந்தால் அதன் நிலையை அரிமா நோக்கு என்பர். சிங்கம் தன் தலையைத் திருப்ப்ாமலே முன் னும் பின்னும் பார்க்கும் இயல்புடையது. இதனை ஸிம்ஹாவ லோகனம் என்பவர் வட நூலார்,

2. கண்ணழிவு செய்தல் என்பது யாது:

செய்யுளில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துக் காட்டல், -

3. குளத்தங்கரை என்பதைப் பிரித்து எழுத வேண்டு கிறேன். - - -

குளம்-அத்து+அம்+கரை குளத்தினது கரை என்பது பொருள். அத்தும் அம்மும் சாரியைகள்.