பக்கம்:விடையவன் விடைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 93

பெணத்த மதத்தைச் சார்ந்த குண்டலகேசி என்பவள் கதையைச் சொல்வதனால் அந்தப் பெயர் வந்தது. சுருட்டை யான கூந்தலையுடையவள் என்பது அப் பெயருக்குப் பொருள்.

353. பஞ்சலட்சணத் திருமுக விலாசம் என்ற நூல் ஐந்து இலக்கணங்களைச் சொல்வதா ? -

பஞ்சத்தின் இயல்பைச் சொல்லும் பிரபந்தம் அது; வில்வியப்பப்பிள்ளை என்பவர் கலிவெண்பாவினுல் பாடியது.

354. ஐம் பெருங் காப்பியங்கள் எவை? அவை யாவும் இப்போது கிடைக்குமா ?

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி என்பன ஐம்பெருங்காப்பியங்கள். அவற் றில் பின் இரண்டும் கிடைக்கவில்லை; சில பாடல்களே கிடைத்துள்ளன. - :

355. தொல்காப்பியம் என்ற பெயருக்கும் காப்பியம் என்ற சொல்லுக்கும் தொடர்பு உண்டா ? -

தொல்காப்பியம் என்பது காப்பியமே அன்று. அது இலக்கண நூல். தொல்காப்பியரால் இயற்றப் பெற்றமையின் அந்த நூலுக்குத் தொல்காப்பியம் என்ற பெயர் வந்தது. காப்பியம் என்பது காவ்யம் என்ற வ்ட சொல்லின் திரிபு. தமிழில் அதைப் பொருட்ட்ொடர்நிலைச் செய்யுள் என்பர்.

356. திருமுருகாற்றுப்படை என்ற பெயர் எப்படி வந்தது ? - - -

- ஆற்றுப்படை என்பது ஒருவகை நூல். பிற்காலத்தில் அதைப் பிரபந்த வகைகளில் ஒன்ருகச் சொல்லியிருக்கிருர் கள். முருகாற்றுப்படை என்பது நூலின் பெயர். அது தெய்வத் தன்மையுடையது என்ற சிறப்பினல் திருமுருகாற்.