பக்கம்:விடையவன் விடைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 விடையவன் விடைகள்

றுப்படை என்று அடையுடன் வழங்குகிருர்கள். முருகனை அடைவதற்குரிய வழியைக் காட்டும் நூல் என்பது அதற் குப் பொருள். நக்கீரர் இயற்றிய அந்தநூல் பத்துப்பாட்டின் முதல் நூலாக விளங்குகிறது.

357. இருந்தமிழே உன்னுல் இருந்தேன் இமையோர், விருந்தமிழ்தம் என்ருலும் வேண்டேன்' என்பது எந்த நூலில் வருகிறது.?

தமிழ் விடுதூது என்ற நூலில் வரும் கண்ணி அது.

358. சிவனடியார்களைப்பற்றிய வரலாறுகளைச் சொல்லும் பெரிய புராணத்தைப் போலச் செய்யுள் வடிவத்தில் திருமாலடி யார்களின் வரலாற்றைச் சொல்லும் நூல்கள் உண்டா ?

திவ்யசூரி சரி தம், குருபரம்பரை, Lä தமான்மியம் என்ற நூல்கள் உள்ளன.

359. ஐங்குறுநூறு என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன ?

ஐந்து குறுநூறுகள் அமைந்தது என்பது பொருள். ஒரு திணைக்குக் குறும்பாடல்கள் நூருக, ஐந்து தி னே க் கு ம் ஐந்நூறு பாடல்கள் அடங்கிய சங்கநூல் அது.

360. பத்துப் பாட்டுக்குரிய நினைவுச் செய்யுள் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். -

- 'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

கருது வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தோடும் பத்து’

என்பது பழைய பாடல்.