சமயம் 127
86. கடம்பர் கோயில் எங்கே உள்ளது ?
திருச்சி மாவட்டத்தில் உள்ள குழித்தலையின் ஒரு பகுதி யாக இப்போது கடம்பர் கோயில் இருக்கிறது.
87. திருவதிகை என்பது இயற்பெயரா? அல்லது மரு.உ.வா..?
அதிகை என்பது, அதியரைய மங்கை அல்லது அதிய ரைய மங்கலம் என்பதன் மரூஉ.
88. அட்ட வீரட்டத் தலங்கள் எவை ?
1. திருக்கண்டியூர் - பிரமன் சிரங்கொய்த தலம். 2. திருக்கடவூர் - காலனச் சங்காரம் செய்த தலம். 3. திரு வதிகை - திரிபுர சங்காரத் தலம். 4. திருவழுவூர் . கஜாசுரனைச் சங்கரித்த இடம். 5. திருப்பறியலூர் - தக்க சங்காரம் நடைபெற்ற இடம், 6. திருக்கோவலூர் . அந்தகாசுர சங்காரப் பதி. 7. திருக்குறுக்கை - காமனைச் சங்கரித்த இடம், 8. திருவிற்குடி சலந்தராசுரனை அழித்த இடம். -
89. அதியேந்திர விஷ்ணுக்கிருகம் என்பது எந்தத் திவ்ய தேசத்தைக் குறிக்கிறது ?
நாமக்கல்லிலுள்ள நரசிம்மசுவாமி கோயிலுக்கு அப் பெயர் உண்டென்று கல்வெட்டினல் தெரிகிறது. அதிகமான் வம்சத்தினர் எடுத்த கோயிலாக இருக்கலாம். .
90. சிதம்பரம் ஆகாயத் தலம் என்று கூறுகிறர்களே: அதை விளக்குக. . -
அங்கே இறைவன் வெறும் வெளியாக இருக்கிருன் என்று புராணம் கூறும்; அப்படி உள்ள இடத்தை இரகசியம் என்று கூறுகிருர்கள். . . . - *
91. ஆறு படைவீடுகள் யாவை பழமுதிர் சோலை எங்கே இருக்கிறது ? -