உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடையவன் விடைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 129

அது குன்றுதோரு டலில் அடங்கும். பழமுதிர் சோலை என்பது இப்போது அழகர் மலே என்று வழங்குகிறது.

96. இலங்கையில் தேவாரத் திருப்புகழ்ப் பாடல்களைப் பெற்ற தலங்கள் எவை ? -

திருக்கேதீச்சரம், திருக்கோணமலை என்னும் இரண்டும் தேவ்ாரத் திருப்புகழ்ப் பாடல்களைப் பெற்றவை. கதிர்காமத் துக்குத் திருப்புகழ்ப் பாடல்கள் உண்டு. ஒரு திருப்புகழில், செந்திலங் க்ண்டிக் கதிர்வேலா, தென்பரங் குன்றிற் பெரு மாளே என்று வருகிறது. அந்தப் பாட்டில் கண்டி என்ற பெயர் வருகிறது. இலங்கையிலுள்ள கண்டி மாநகரம் என்று கொள்ளும்படி அது அமைந்திருக்கிறது.

87. மல்லிகார்ஜுனம் என்பது ஆந்திர காட்டிலுள்ள பூரீசைலமென்றும், மத்தியார்ஜசனம் திருவிடை மருதூர் என்றும் சொல்கிருர்கள். புடார்ஜுனம் என்பது எந்தத் தலம்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்.

98, பென்னர் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்’ என்று தொடங்கும் அப்பர் பெருமானின் தேவாரப் பாடலில் வரும் தூங்கான மாடம் என்ற சிவத்தலம் தமிழ் நாட்டில் எங்கே உள்ளது ? * -

தென்னர்க்காடு மாவட்டத்தில் பெண்ணுகடம் என்ற ஊரில் உள்ளது. அந்தப்பாசுரத்தில், துன்னர் கடைத்தையுள் தூங்கான மாடச் சுடர்க்கொழுந்தே என்பதில் வரும் கடந்தை என்பது பெண்ணுகடத்தைக் குறிப்பது

- 99, திருப்பனந்தாளில் உள்ள ஆலயத்துக்குத் தாடகையீச்சரம் என்ற பெயர் இருப்பதாகத் தேவாரத்திலிருந்து தெரிய வருகிறது. அந்தத் தாடகை இராமாயணத்தில் வரும் தாடகையா ? - -