சமயம் 135
தோன்றியதாதலின் ருத்திராட்சம் எனப் பெயர் பெற்றது. அதையே அட்சமணி என்பர்.
121. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறர்கள். அது எப்படி வந்தது ?
உமாமகேசுவரன் என்பதே அ வ் வா று வந்ததென்று
காஞ்சி காமகோடி பீடாதிபதி பூ சங்கராசாரிய சுவாமிகள் அருளியிருக்கிருர்,
122. குரோத பட்டாரகர் என்பது யாருக்குப் பெயர்?
துருவாச முனிவருடைய பெயர். ரீ வித்தியா உபாச கர்கள் அப்படிக் குறிப்பார்கள்.
123. கறுப்பன் வெள்ளையன், காத்தான், தீத்தான் - இந்தப் பெயர்கள் தெய்வப் பெயர்களா ? அப்படியால்ை எந்த எந்தத் தெய்வத்தைக் குறிக்கும் ?
கறுப்பன், - கிருஷ்ணன்; வெள்ளையன் - வெள்ளை நிற முடைய பலராமர்; காத்தான்-காப்புக் கடவுளாகிய திரு மால்; தித்தான்-திரிபுரத்தையும் காமனையும் எரித்தவனகிய சிவபெருமான். .
124. தகராகாசம் என்பது என்ன ?
இருதயத்தின் இடையிலுள்ள சூட்சுமமான சிறிய வெளி. இதைக் குகையென்றும் கூறுவர்; தகராலயம் என்றும் சொல் வதுண்டு. ; : -
125. முருகனுக்கு எந்தப் பக்கத்தில் வள்ளி நாயகி எழுந்தருளியிருக்கிருள் :
வலப்பக்கத்தில்.