பல்வகை
1. கற்கிமுகி என்பதன் பொருள் என்ன? அந்தப் பெண்ணப்பற்றிய செய்திகள் எங்கே வருகின்றன ?
கற்கி என்பது குதிரையின் பெயர். குதிரை முகமுடைய பெண் பூதத்துக்குப் பெயர் அது. திருப்பரங்குன்றத்தில் குகையில் நக்கீரரோடு ஆயிரம் புலவர்களை அந்தப் பூதம் அடைத்ததாகவும் நக்கீரர் திருமுருகாற்றுப் படையைப் பாடி முருகனை வருவித்து அந்தப் பூதத்தை அழிக்கச் செய்த தாகவும் ஒரு வரலாறு உண்டு. திருப்பரங்குன்றப் புராணம், சீகாளத்திப் புராணம் முதலிய நூல்களில் இந்தக் கதை வரு கிறது. கற்கிமுகி யைப்பொருதராவுத்த னைவனும் என்று திருவகுப்பில் அருணகிரி நாதரும் இதைச் சொல்கிரு.ர்.
2. மயன் அசுரர்களின் தச்சன், தேவத் தச்சன் யார்? விசுவகர்மா. -
3. இசைக் கருவிகள் ஐந்து இன்னவை என்று உதாரணங்கள் தந்து விளக்க வேண்டுகிறேன். .
(1) மிடற்றுக் கருவி - பாடும் தொண்டை, இது வாய்ப் பாட்டில் பயன்படுகிறது (2) தோல் கருவி - பறை, முரசு, கஞ்சிரா முதலியன. (3) தொளைக்கருவி - புல்லாங்குழல், நாகசுரம் (4) நரம்புக் கருவி - வீணை, வயலின். (5) கஞ்சக் கருவி - தாளம், மோர்சிங் முதலியன. . .
4, அத்தான் என்பது எந்த உறவின் முறையைக் குறிக்கிறது ? ... • . . . . . ..
அத்தை மகன் என்பது அத்தான். என்று வந்திருக்க வேண்டும். அதிலிருந்து மணம் செய்துகொன்ளும் உரிமை