பக்கம்:விடையவன் விடைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 விடையவன் விடைகள்

14. மன்மதனுடைய ஐந்து அம்புகள் எவை ? தாமரை, அசோகம்யூ, மாம்பூ, முல்லை, நீலோற்பலம் என்பவை. -

15. தrlன பிளுகினி என்பது எது ? தென்பெண்ணையாறு.

16. பஞ்சவர்ணம் என்கிருர்கள்; ஏழு வர்ணம் என்கிருர்கள். எது சரி?

பழங்காலத்தில் சிறப்பான வர்ணங்கள் ஐந்து என்று கொண்டார்கள். அதல்ை பஞ்ச வர்ணம் என்று வழங் கினர்கள். வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்பவை அவை, விஞ்ஞானிகள் வானவில்லில் உள்ள ஏழு வண்ணங்களைச் சுட்டிக் காட்டுகிருர்கள். அவை ஏழும் ஒன்றில்ை வெள்ளையாகிவிடும். அவை ஏழாவன ஊதா, நீலி, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.

17. ராகங்கள் மொத்தம் எத்தனை : . மேளகர்த்தா ராகங்கள் எழுபத்திரண்டு. அவை சம்பூர்ண ராகங்கள். அவற்றிலிருந்து பிறந்த ஜன்ய ராகங்கள் பல. - -

18. கிறித்தவர் மறைநூலான பைபிளுக்குத் தமிழில் விவிலிய நூல் என்ற பெயர் எப்படி வந்தது? . . . ;

பைபிள் என்பதே விவிலியம் எனச் சிதைந்தது. கிரேக்க மொழியில் பிபிளியோ என்பர் அதிலிருந்து வந்ததாகவும் கொள்ளலாம்.

19. சாதக பட்சி என்பது எது ? மழை நீரை உண்னும் பறவை அது. வானம்பாடி.

என்று தமிழில் வழங்கும். தற்பாடிய தளியுணவிற் புள் என்று பத்துப்பாட்டில் வருகிறது. - . . . . . .

20. ராகம், ஸ்வரம், பண், இசை-இவை தனித்தனியா ?