பக்கம்:விடையவன் விடைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வகை 14!

ராகம் என்பதும் பண் என்பதும் ஒன்று. மற்றவை வெவ் வேறு. ஆரோகண அவரோகண ஸ்வரங்களால் தனக்கென ஓர் அமைப்பை உடையது ராகம் அல்லது பண் என்று பொதுவாகச் சொன்னுலும், இசையிலக்கணப்படி மேளக்ர்த் தாவாகிய ராகங்களையே பண் என்று சொல்லவேண்டும். அவை ஏழு சுவரங்களும் உடையவ்ை. ஜன்ய ராகங்களை, அதாவது ஏழு ஸ்வரங்களிற் குறைந்தவற்றைத் திறம் என்பது தமிழ் வழக்கு, ஸ்வரம் என்பது தமிழில் நரம்பு என்று வழங்கும். ஷட்ஜம் முதலிய ஏழினத் தமிழில் குரல் முதலிய ஏழாகச் சொல்வர். இசை என்பது சங்கீதத்தின் பொதுப் பெயர். சில சமயங்களில் ஒன்றன் பெயர் மற்முென்றுக்கு ஆகுபெயராய் வரும், ஏழிசை என்னும் போது இசை என்பது இசையின் உறுப்பாகிய நரம்புக்கு முதலாகு பெயராய் வந்தது. - .

21. ரெளரவாதி நரகம் என்கிருர்கா, ரெளரவாதி என்பதற்குப் பொருள் என்ன ? -

ரெளரவம் என்ருல் பயங்கரமானது என்று பொருள். மிகக்கொடிய நகரமாதலால் இதை முதலில் வைத்துஎண்ணி ஞர்கள். இது வேதனைகளுக்குத் தலைவன்; துயரங்களுக்குத் தந்தை' என்று மார்க்கண்டேய புராணம் வருணிக்கிறது. ரெளரவம் முதலிய நரகம் என்னும் பொருளில் ரெளரவாதி நரகம் என்று சொல்கிருர்கள். . . . . . . . . . -

22. நவலோகம் என்பவை எவை?

பொன், இரும்பு. செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்த நாகம், வெண்கலம் என்பவை.

23. துலாபாரம் என்பது என்ன ?

. ஒருவரைத் துலையாகிய தராசில் ஏற்றி அவர் நிறைக்குப்

பொன்னையோ பிற மதிப்புள்ள பண்டத்தையோ இட்டு நிறுத்து அந்தப் பொருளைத் தானம் செய்வது.

24 சங்ககிதி, பதுமகிதி என்பவை யாவை?