பக்கம்:விடையவன் விடைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 விடையவன் விடைகள்

நிதி வகைகளில் சங்கநிதி, பத்மநிதி என்பவை இரண்டு. சங்கைப் போன்ற வடிவுடைய சங்கநிதி வேண்டிய செல்வத் தைத் தரும். தாமரை போன்ற உருவமுடையது பத்மநிதி. சங்கம், பத்மம் என்ற இரண்டும் மிகப் பெரிய எண்ணிக் கையைக் குறிக்கும் சொற்கள்.

25. மும்முரசு என்பவை யாவை ?

மண முரசு, கொடை முரசு, நியாய முரசு என்பவை. நியாய முரசுக்குப் பதிலாகப் வெற்றி முரசையும் சொல்வ துண்டு. - * -

26. பதினெண் சித்தர்கள் யார் யார் ?

திருமூலர், இராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வால்மீகி, கமலமுனி, போகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி,நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டி, சட்டைமுனி, சுத்தானந்த தேவர், குதம்பைச் சித்தர், கோரக்கர், .

27. இம்மி என்பதன் அளவு என்ன 2 10,75,200-இல் ஒரு பங்கு.

28. சந்திரனது ஒளியை உண்டு வாழும் பறவை உண்டா ? எப்ப தியில் இருக்கிறது ? g

சகோரம் என்னும் பறவை நிலாவை உண்டு வாழ்வது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனல் இது எந்தப் பறவை என்று இனம் காண் முடியவில்லை. . . 29. ஓரறிவு, ஈரறிவு என்று வரும் அறிவுகள் எத்தனை வகைப்படும் ? என்ன என்ன ஜீவராசிகள் எந்த எந்த அறிவு வகையைச் சேர்ந்தவை ? . மரஞ்செடி கொடிகள் பரிச அறிவைமட்டும் 鸟一裔t一出封 ஒரறிவுயிர்கள். இப்பி, சங்கு முதலியவை பரிச அறிவோடு சுவையறிவையும் உடைய ஈரறிவுயிர்கள். கறையான், எறும்பு போன்றவை மேலே சொன்னவற்ருேடு மணத்தை அறியும் அறிவும் சேர்ந்த மூன்றறிவை உடையவை. வண்டு.