உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடையவன் விடைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೬ು :ಪಾಕಿ; - 143

முதலியவை பார்வையோடு சேர்ந்து நாலறிவு உடையவை. மற்ற விலங்குகள், பறவைகள், மனிதர்கள் செவியுணர். வோடு ஐந்தறிவு உடைய உயிர்கள். மனிதன் பகுத்தறியும் ஆருவது அறிவையும் உடையவன்.

30. பிறப்பேழாவது: "ஊர்வபதி னென்ரும் ஒன்பதுமானுடம் நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச்-சீரிய பந்தகாத் தேவர் பதிஞ லயன்படைத்த அந்தமில்சீர்த் தாவரம்நாtலந்து' என்று பரிமேலழகர் கூறுவதன் பொருள் என்ன ?

ஜீவராசிகள் எண்பத்துநான்கு லட்சம் வகை என்பது ஒரு கணக்கு. இன்ன இன்ன இனங்கள் இத்தனை இத்தனை லட்சம் என்று காட்டும் பழம் பாடலைப் பரிமேலழகர் மேற் கோளாகக் காட்டுகிருர். அதன் பொருள்: ஊர்வன பதினுெரு லட்சம்; ஒன்பது லட்சம் வகை மானிடர்; நீர் வாழ்வன பத்து லட்சம், பறவையினம் பத்து லட்சம்; நாற்காற் பிராணிக்ள் பத்து லட்சம், தேவர் வகை பதின்ைகு லட்சம்; தாவர வகை இருபது லட்சம். ஆக எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசி களின் பேதங்கள். -

31. காவிரி ஜீவநதியா? ஆம், எப்போதும் வற்ருமல் ஒடும் நதியை ஜீவநதி என்று சொல்வார்கள். முகத்துவாரத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் நீர் இல்லாமல் இருக்கலாம் ஆல்ை மைசூர், கொங்குநாடு ஆகிய இடங்களில் எப்போதும் காவேரி வற்றுவதில்லை. அவற்ருத காவேரி, பொய்யாத பொன்னி நதி என்று புலவர்கள் பாடியிருக்கிருர்கள்.

32. இலங்கையில் வாழும் மக்களில் ஒரு சாராரைச் சோனகர் என்கின்றனர்; அவர்கள் யார்? ஒல்லாந்தர் என்பது யாரைக் குறிக்கிறது?

இல்ங்கையில் முஸ்லிம் மக்களைச் சோனகர் என்று கூறுகின்றனர். யவன தேசத்தாரை அப் பெயரால் வழங்கும்