பக்கம்:விடையவன் விடைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 13

ஒருமூன்று காய்ச்சீரும் ஒன்ருகி நின்ற உயர்மாச்சீ ரும்பாதி யடியில்வரு மஃதே'

என்பது போல வருவது அது. 'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே' என்பவை போல அருட்பாவில் வருவன அந்த வகையில் சேர்ந்தவை.

44. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அ.தும், பிறன் பழிப்ப தில்லாயின் நன்று என்பது போன்ற குறட்பாக் களில், அ.தும் என்பது தேமாவாக வருகிறது. 'கற்றில குயினும் கேட்க அ.தொருவற், கொற்கத்தின் ஊற்ருங் துணை' என்பதில் : அ.தொருவற் என்பது கருவிளங்காயாக வந்துள்ளது. இப்படி வரலாமா ? -

ஆய்தம் அலகு பெற்றும் பெருமலும் வரும் என்ற விதி யாப்பருங்கலக்காரிகையில் இருக்கிறது. அதன்படி தளைக்கு ஏற்ப அலகு பெருத இடத்தில் ஆய்தம் மெய்யெழுத்தைப் போல நிற்கும்; அலகு பெறுமிடத்தில் குற்றெழுத்தைப் போல அலகு பெறும். -

45. வீர சோழியத்தில் உள்ள கட்டளைக் கலித்துறையில் யாதனி னிங்கு மவதிய தாமிட மாதாரமாய் ' என்றும் நற்கருத் தாத்தீ யகமாங் கருமங்ான் காதாரமேல் என்றும் வரு மிடங்களில் ஈற்றுச்சீர்கள் விளங்காயாக அமையாதது தவறு அன்ருே ? - . . . . . . . .

ஆதாரமாம், ஆதாரமேல் என்பவை. தேமாங்கணி. இவ்வாறு சிறுபான்மை வருவதுண்டு, தேமாந்தண்பூவும் வரும். அவற்றைக் கூவிளங்காயைப் போலக் கொள்ள வேண்டும். -

46. விகற்பம் என்ருல் என்ன ! . உதாரணத்துடன் விளக்க வேண்டுகிறேன். - - -

விகற்பம் என்பதற்கு வேறுபாடு என்பது பொருள் யாப்பிலக்கணத்தில் அடி எதுகையைக் கொண்டு, இது ஒரு