பக்கம்:விடையவன் விடைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 விடையவன் விடைகள்

விக ற் பத் தால் வந்தது; இது இரு விகற்பத்தால் வந்தது; இது பல விகற்பத்தால் வந்தது’ என்று வகுப்பது umTLዘ. -

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு."

இது ஒரு விகற்பத்தால் வந்தது.

"பிறர்மனம் புண்படப் பேசலும் குற்றம் அயலார் குறைபுறத்தே துாற்றலும் அஃதே

சிறிதும் பயனில்ல செப்பலும் தீதே அனைத்தினும் தீதுபொய் யாம்."

இது பல விகற்பத்தால் வந்தது.

47, திருப்புகழில் ஆளப்பட்டுள்ள சந்தங்கள் அருணகிரி யாளின் கண்டுபிடிப்புகளா ? இல்லையா ?

சந்தம் என்பது சந்தஸ் என்ற வடசொல்லின் திரிபு செய்யுளுக்குரிய ஓசை என்பது பொருள். இப்போது நாம் சந்தம் என்று வழங்குவதை முன்பு வண்ணகம், வண்ணம், வகுப்பு என்று வழங்கினர். கலிப்பா வகையில் ஒன்ருகிய வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் வரும் வண்ணகம் என்பது சந்தந்தான். அதை முடுகியல் என்றும் சொல்வார் கள். வரிப்பாடல்களில் சந்தம் அமைந்திருந்தது. சிலப்பதி காரத்திலுள்ள பாடல்கள் இதை உணர்த்தும். பிற்காலத்தில் பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தத்தில் சந்தம் விரவி வரலா யிற்று. அதை வகுப்பு என்று பிரபந்த இலக்கணம் கூறும். ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் பல சந்தப் பாடல்கள் உள்ளன. ஒட்டக் கூத்தருக்கும் முன்பே முதல் இராசராசன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண் ட்ார் நம்பிகள், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், திருநாவுக்கரச தேவர் திருவேகாதசமாலை என்ற நூல்களில் பல சந்த விருத்தங்களைப் பாடியுள்ளார்.