பக்கம்:விடையவன் விடைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 15

ஆயினும் அருணகிரியார் மிகச் சிறப்பான வகையில் சந்தப் பாடல்களைப் பாடியிருக்கிரு.ர். அவை அவராகவே அமைத்துக் கொண்டவை. இடையிடையே தனதான என்று வரும் தொங்கல அமைக்கும் முறை அவருடைய சொந்தப் படைப்பென்றே சொல்ல வேண்டும். யாப்பு வகை யில் திருப்புகழ்ப் பாடல்கள் யாவுமே அளவு ஒத்த நான்கு அடிகளால் அமைந்த ஆசிரியச் சந்த விருத்தங்களே; சீர்கள்

பல அமையப் பாடியிருக்கிரு.ர். -

48. வாழ்த்து திருநாகை வாகான தேவடியாள், பாழ்த்த குரலெடுத்துப் பாடினுள் - நேற்றுக், கழுதைகெட்ட வண்ணன் கண் டேன் கண்டே னென்று, பழுதையெடுத் தோடிவந்தான் பார் - இந்த நேரிசை வெண்பாவில் இரண்டாவது அடியின் ஈற்றில் தனிச்சீர் வரவில்லையே எதுகை இருந்தால்தானே ! நேற்று ' என்பது தனிச்சீராகும் ? .

நேற்று என்பதில் வல்லின எதுகை வந்தது. முன்னுள்ள இரண்டு அடிகளின் தொடக்கத்தில் ஆசிடையிட்ட எதுகை வந்தது. ழ் என்பது ஆசு. வாழ்த்து, பாழ்த்த, நேற்று இந்த மூன்றும் வல்லின எதுகை அமைந்தவை. .

49. நல்லார்கட் பட்ட வறுமையின் இன்குதே, கல்லார் கட்பட்ட திரு'-இந்தக் குறளில் வறுமையின் என்பதை கிரை நேர் நேர் என வாய்பாடு கூறுவதா ? கிரை கிரையாகக் கொள்

மை யென்பது ஐகாரக் குறுக்கமாதலின் அதனைக் குறிலைப் போலவே எண்ணி நிரை நிரையாக்கிக் கருவிளம் என்று வாய்பாடு கூறவேண்டும். - - - -

50. ஆசாரக் கோவையில், நன்றி. அறிதல்.ஆசா

வித்து என்று வரும் வெண்பா ஐந்தடியாக உள்ளது. அப்படி ಎgಖTur? - - . . . .