பக்கம்:விடையவன் விடைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 . விடையவன் விடைகள்

நாலடிக்கு மேல் பன்னிரண்டு அடிவரையில் உள்ள வெண்பாக்கள் பஃருெடை வெண்பா என்ற வகையைச் சேர்ந்தவை.

51. பஃருெடை வெண்பாவுக்கும் கலிவெண்பாவுக்கும் என்ன வேறுபாடு? . .

ஐந்தடி முதலாகப் பன்னிரண்டு அடியளவும் வருவது பஃருெடை வெண்பா. அதற்கு மேற்பட்டு வ ரு வ து கலிவெண்பா. .

52. மிறைக்கவி என்பது எதற்குப் பெயர் : த்ெதிர கவிக்குப் பெயர்.

53. அட்டாலும் பால்சுவையிற் குன்ரு தளவளாய், கட்டாலும் நண்பல்லார் கண்பல்லர், கெட்டாலும் மேன்மககள் மேன்மக்க ளேசங்கு, சுட்டாலும் வெண்மை தரும்-இந்த வெண் பாவில் தனிச்சொல் இல்லை. இதை எந்த வகையில் சேர்ப்பது:

இதைச் சவலை வெண்பா என்று கூறுவர். இதை நேரிசை வெண்பாவாகக் காட்டும் பாடபேதம் ஒன்று வருமாறு: 'அட்டாலும் பால்சுவையிற் குன்ரு தளவளாய், நட்டாலும் தண்பல்லார் நண்பல்லர்-கெட்டாலும், மேன்மக்கள் மேன் மக்க ளேசங்கு சுட்டாலும், தான்மிக்க வெண்மை தரும்.”

54 ஆண் பெண் தோன்களுக்கு உவமையாக மூங்கிலக் குறிப்பது ஏன் -

. . ; பெண்ணின் தோளுக்குத்தான் மூங்கில உவமிப்பர். வழுவழுப்பாக இருப்பகளுல் அது உவமையாகிறது.

55. கோவை என்னும் பிரபந்தத்தில் பல வகை உண்டா :