பக்கம்:விடையவன் விடைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 17

கோவை என்பது கோக்கப் பெற்றது என்று பொருள் பெறும். தமிழ்ப் பிரபந்த வகையில் ஐந்திணைக் கோவை என்பது நானுற்றுக்கு மேற்பட்ட அகத்துறைகள் எல்லா வற்றுக்கும் இலக்கியமாகிய பாடல்களைக் கொண்டது. ஒரு துறைக் கோவை என்பது ஒரே துறையில் பல பாடல்களைக் கொண்டது. வருக்கக் கோவை என்பது உயிர் எழுத்துக் களையும் உயிர்மெய் யெழுத்துக்களையும் முதலாகவுடைய அகத்துறைப் பாடல்களை உடையது. இவை அகப்பொருள் இலக்கியங்கள். இவற்றையன்றி மும்மணிக்கோவை என்று மூன்று வேறு பாடல்கள் அந்தாதியாக அமைய முப்பது பாடல்களைக் கொண்ட பிரபந்தம் ஒன்று உண்டு. அது அகப் பொருளமைதியை யுடையதாக இருக்க வேண்டும் என்ற வரையறை இல்லை.

56. தூது என்ருல் என்ன தூது விடற்குரியன என்று வரையறுத்த பத்துப் பொருள்கள் எவை ?

அரசர்கள் மற்ற அரசர்களுக்குச் செய்தி அனுப்புவதை யும், காதலன் காதவியர் தம்முள் ஒருவருக்கொருவர் தம் நிலையைச் சொல்லிவர அனுப்புவதையும் துரது என்று சொல் வார்கள். துது என்னும் பிரபந்தம் பின்னலே சொன்ன பொருளில் வரும். பயில்தரும் கலிவெண் பாவி ளுலே உயர்தினைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும், சந்தி யின் விடுத்தல் முந்துறு துரதெனப், பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே (இலக்கண விளக்கம்) எனபது இதன் இலக்கணம். தூதுக்குரிய பொருள்கள். அன்னம், மயில், கிளி, மேகம், மைன, பாங்கி, குயில், நெஞ்சு, தென்றல் வண்டு என்பன. இவற்றையன்றி வேறு பொருள்களையும் து.ாதனுப்புவது உண்டு. r - -

57. சின்னப்பூ என்பதற்கும் தசாங்கம் என்பதற்கும் வேறுபாடு என்ன ? - , , ;

பாட்டுடைத் தலைவனுக்குரிய மலை, நாடு முதலிய பத்து உறுப்புக்களே, உறுப்பு ஒன்றுக்குப் பத்துப் பாடலாக நூறு