பக்கம்:விடையவன் விடைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விடையவன் விடைகள்

பாடல் பாடுவது சின்னப்பூ: ஓர் உறுப்புக்கு ஒரு செய்யு. ளாகப் பத்துப் பாடல் பாடுவது தசாங்கம்,

58. மண்டலித்தல் என்பதற்கு என்ன பொருள் ? வட்டமாதல் என்பது சொற்பொருள். அந்தாதியாக வரும் பிரபந்தங்களில் இறுதிப் பாடலின் ஈறும் முதற்

பாட்டின் முதலும் அந்தாதித்து வருவதே மண்டலித்தல் என்று சொல்லப்பெறும்.

59. ஒன்பது பாடல்களால் வரும் பிரபந்தம் ஏதேனும் உண்டா? . .

நவமணி மாலே என்பது வெவ்வேறு பாடல்கள் ஒன்பது தால் அமைந்தது.

60. சாகாசந்திர கியாயம் என்பது என்ன ?

சந்திரன ஒரு மரத்தின் கிளைக்கு மேல் இருப்பதாக அடையாளம் காட்டுவதுபோல், சம்பந்தமுடையது போலத் தோற்றும் ஒன்றைக் காட்டிக் காணவேண்டிய முக்கியமான பொருளைக் காட்டுவது இந்த நியாயம். சாகை-கிளை.

61. ஆகமப் பிரமாணம் என்பதில் எந்த ஆகமம் குறிக் கப்படுகிறது? . . . . . . .

இங்கே ஆகமம் என்பதற்கு நூல் என்று பொருள். நூலிலுள்ள சான்றையே ஆகமப் பிரமாணம் என்பர்.

62. இலக்கணம் முந்தியதா, இலக்கியம் முந்தியதா? இலக்கியந்தான் முந்தியது. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் என்பது நன்னூல். .

63. அறம் வைத்துப் பாடுதல் என்ருல் என்ன ? பாட்டில் மரணப் பொருத்தம் அமையவும் அமங்கலச் சொல் பொருந்தவும் பாடினல் பாட்டுடைத் தலைவருக்குத்