பக்கம்:விடையவன் விடைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 19

தீங்கு நேரும் என்பது ஒரு நம்பிக்கை. சில புலவர் பாட் டுடைத் தலைவருக்குத் தீங்கு நேருவதற்காகவே அப்படிப் பாடுவர் என்று ஒரு செய்தி வழங்குகிறது. அதையே அறம் வைத்துப் பாடுதல் என்றும், அறம் பாடுதல் என்றும் சொல் வார்கள். ஒருவர் இறந்துபோனல், அதற்கு இரங்கிப் பாடும் செய்யுளைக் கையறுநிலைச் செ ய் யு ள் என்பர். அதைக் கையறம் என்றும் சொல்வதுண்டு. கம் பன் பேரிற் பாடிய கையறம் என்று தமிழ் நாவலர் சரிதையில் வருகிறது. கையறம் பாடுவது என்பதே அறம் பாடுவது எ ன் று வந்திருக்க வே ண் டு ம் இறந்துபோனவருக்கு இரங்கிப் பாடுவது அது. உயிரோடு இருப்பவரையே இறந்து போனவராக வைத்துப் பாடினுல் அவர் இறப்பார் என்று கருதிப் பாடும் பாடலாதவின் அறம் பாடுவதாயிற்று. இறவா தவருக்குக் கொடும்பாவி கட்டுவது போன்றது. இது என்று தோன்றுகிறது. -. .

64. தெலுங்கு தமிழிலிருந்து பிரிந்தது அல்ல, வடமொழியி: லிருந்து வந்தது என்று நண்பர் ஒருவர் கூறுகிருர். தமிழி. லிருந்து வந்ததற்குச் சான்று என்ன ?

தெலுங்கில் வடசொற்கள் மிகுதியாகப் பயி ன்று வ்ருவதலுைம், வல்லின எழுத்துக்களில் நான்கு வேறு ஒலி யுடைய எழுத்துக்கள் இருப்பதனாலும் வடமொழியிலிருந்து பிரிந்ததாகச் சிலர் எண்ணுகிருர்கள். அது தவறு. வாக்கிய அமைப்பு முதலியவற்றைக் கொண்டுதான் மொழிகளின் குடும்பத்தை வரையறை செய்வது வழக்கம். திராவிட மொழிகள் என்னும் இனத்தைச் சார்ந்தது தெலுங்கு, என்பதும், அந்த இனத்தில் பழமையான மொழி தமிழ் என்பதும் திராவிட மொழிகளின் ஒப்பியல் இ லக் க ண ம் பற்றி நூல் எழுதிய கால்டுவெல் முதலியவர்களுடைய முடிவுகள். இதை நினைந்தே மனேன்மணியத்தின் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை, கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும்துளுவும், உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்று பாடியிருக்கிருர்.