பக்கம்:விடையவன் விடைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விடையவன் விடைகள்

65. மணிமேகலையில் வரும் சித்திராபதி என்பவள் யார்? மாதவிககுத் தாய்; மணிமேகலைக்குப் பாட்டி,

66. பாரத யுத்தத்தில் பதினெட்டு அக்குரோணி படை கள் என்று வருகிறது. அ. க் குரோணி என்பது என்ன அளவு : - -

அக்குரோணி என்பது அrெளஹிணி என்ற வட சொல்லின் திரிபு. 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள், 1,09,350 காலாட்கள் கொண்ட படையின் அளவை ஒர் அக்குரோணி என்பர்.

67. தமிழ் இலக்கியங்களில் கோ சர் என்பவர்களைப்

பற்றி வருகிறதே அவர் ஒருவரா, கூட்டத்தினரா ? விளக்க வேண்டும்.

கொங்கு நாட்டில் இருந்த ஒரு குழுவினர் கோசர் அவர்கள் எப்போதும் மெய்யையே கூறுபவர்கள். சங்க இலக்கியங்களில் அவர்கள் பெயர் வருகிறது. கொங்கிளங் கோசர், தன் மொழிக் கோசர் என்று அவர்களை வழங்கு வார்கள். T- - - -

68. முசிடு என்று ഞഖിത്രtsണ്ടേ அந்தச் சொல் எதைக் குறிக்கிறது:

மரங்களில் மஞ்சள்நிற எறும்பு கூடு கட்டி வாழும், அது கடித்தால் மிகவும் கடுக்கும். அதற்கு முயிறு என்று பெயர். 'முயிறு மூசு குடம்பை என்று அது மொய்க்கும் கூட்டைச் சங்க நூல் வருணிக்கிறது. முயிறு என்பதே முசிடு என்று மாறி வழங்குகிறது. *

தி 69. பூர்ண பலம். சதா பலம்-இவை எந்தப் பழங்கண்க் குறிக்கும் ? . . . . . . - . . . . . . . . .

தேங்காய், எலுமிச்சம்பழம் என்பவற்றைக் குறிக்கும்.