பக்கம்:விடையவன் விடைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் - 2 |

70. முட்டாள் என்ற சொல் அறிவிலியைக் குறிக்க வழங்குகிறது, அது எவ்வாறு வந்தது ? -

முற்ருள் என்பதே முட்டாள் என்று வழக்கில் வந்து விட்டது. முழுமகன் என்பதற்கு அறிவிலி என்று பொருள். முற்று ஆள் என்பதும் முழுமகன் என்பதும் ஒரே பொருளைக் குறிக்கும் இருவேறு சொற்கள்: அறிவுக்கே இடமில்லாமல் உடல் முழுவதும் வெற்று ஆளாகவே இருப்பவன் என்று கொள்ளல் பொருந்தும்,

71. மனிதன் என்னும் சொல் ஆண்பாலில் வழங்குகிறது; அதற்குப் பெண்பல் என்ன ? -

மனிதப் பெண் என்றுதான் சொல்ல வேண்டும். பேச்சு வழக்கில் மனுஷன், மனுவி என்று இருபாலாருக்கும் உரிய சொற்கள் வழங்குகின்றன.

72. தேவதானம், பள்ளிச் சந்தம், பிரமதேயம் என்பவற் றுக்கு விளக்கம் தருக.

தேவதானம்.திருக் கோயில்களுக்கு இறையிலியாகக்

கொடுத்த நிலங்கள். பள்ளிச்சந்தம்-சைன பெளத்தப் பள்ளி'

களுக்கு மானியமாக விட்ட கிராமம். பிரமதேயம். அந்தணர் களுக்கு மானியமாக விட்ட கிராமம். : , “... :

73. தூய தமிழில் அழகு என்பதற்கு எதிர்ப்பதமும் கண் பன் என்பதற்குப் பெண்பாலும் யாவை? -

அழகின்மை, நண்பினள். - -

14. பழைய ஏடுகளில் இாஞ்சிதம் என்ற உலோகத்தின் பெயர் காணப்படுகிறதே; இது என்ன உலோகம் ?

இரஞ்சிதம் என்பது பிழையான உருவம், இரசதம் என்றிருக்கலாம். அது வெள்ளியைக் குறிக்கும்.