பக்கம்:விடையவன் விடைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விடையவன் விடைகள்

75. தொண்டு என்பது ஓர் எண்ணைக் குறிப்பதாகச் சொல்கிருர்கள். அது எந்த எண் ? -

- ஒன்பது என்ற எண்.

76. வாய்க்கு வடமொழிச்சொல் இல்ல என்ருல் ஜிஹ்வா என்ற வடசொல்லின் பொருள் என்ன ? - . .

சுவையை அறியும் இந்திரியமாகிய நாக்கைக் குறிக்கும் சொல் அது. .

77. இந்து, இம்மி, சொற்பம், சிறிய ஆகியவற்றின் பொருள்களும் எதிர்ப்பதங்களும் யாவை : . -

இந்த நான்கும் சிறிதளவு என்பதைக் குறிக்க வழங்கு கின்றன. இந்து என்பது சில வட்டாரங்களில் மட்டும் வழங்கும். அதற்கு எதிர்ப்பதம் இருப்பதாகத் தெரியவில்லை. இம்மி என்பது மத்தங்காய்ப் புல்லரிசியின் பெயர். அதைச் சிறிய அளவுக்கு வாய்ப்பாடாகச் சொல்வது வழக்கு, தினை என்பதைப் போல. அதற்கு அம்மி என்பதை எதிர்ப்பத மாகச் சொல்லலாம். சொற்பம் என்பதற்கு எதிர்ப்பதம் அதிகம். சிறிய என்பதற்கு எதிர்ப்பதம் பெரிய'.

78. பகவன் என்பது தமிழ்ச் சொல்லா ?

கடவுளைக் குறிக்கும்போது பகவன் என்பது பகவான் என்ற வடசொல்லின் திரிபு, பகம் என்பது ஐசுவரியம்

வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்களைக் குறிப்பது. இந்த ஆறு குணங்களை யுட்ையவன் ஆதலால் பகவான் என்ற பெயர் வந்தது. பகவன் என்பது தமிழ்ச் சொல்லானல் பகவை உடையவன் என்னும் பொருளைத் தரும். - - -

79. சுவாமிகள்வாள், அவாள் இவை எவற்றின் திரிபு P

சுவாமிகள் அவர்கள், அவர்கள் என்பவற்றின் திரிபு. -