பக்கம்:விடையவன் விடைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கிலம் 23

80. பிலாக்கணம் என்ற பெயர் எப்படி வந்தது ? பிணக்கானம் என்பதே பிலர்க்கணம் ஆயிற்றென்று மகாவித்துவான் ரா. இராகவையங்கார் எழுதியிருக்கிரு.ர்.

81. புதிர் என்று விடுகதையைச் சொல்கிருர்களே. அதற்கு என்ன காரணம் ?

தொல்காப்பியத்தில் ു என்று வருகிறது. அது விடு கதைதான். அது பிதிர் என்ருகிப் பிறகு புதிர் என்று மருவி வந்திருக்க வேண்டும்.

82. கருவேப்பிலே என்று சொல்வது சரியா?

கறிவேப்பிலே என்பதுதான் சரி.

83. இனிமை என்பதன் எதிர்ப்பதம் என்ன ? இனிமைக்கு எதிர்ப்பதம் இன்னமையாகும். 84. நான் என்னும் சொல் தொல்காப்பியச் சூத்திரத்தில் உண்டா ? .

இல்லை.

85. கணவன் என்பது காரணப் பெயரா? - கணம் என்பது கூட்டம் என்னும் பொருளையுடையது.

கூட்டத்துக்குத் தலைவன் என்ற பொருளுடையது, கணவன் என்ற சொல். - - - . . . . . . .-- - . . *

86. அணிற்பிள்ளை, கிளிப்பிள் என்றவற்றிற்குப்பின்ன என்ற பெயர் ஏன் வந்தது ? - - .

குழந்தையை வளர்ப்பது போலக் கருத்துடனும்

அன்புடனும் வளர்ப்பதல்ை அப்பெயர் வந்தது. கீரிப்

பிள்ளை, தென்னம் பிள்ளை என்று வருவதற்கும் அதுவே காரணம். . ... . . . ; . . . . . . . . . . . . "... 3.; & 32