பக்கம்:விடையவன் விடைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இலக்கண இலக்கியம் 41

என்பது பொருள். மருமகளாக் கொண்டு மணுட்டுப்புறம் செய்யுங்கொலோ’ என்பது பெரியாழ்வார் திருவாக்கு.

165. அமுதம், அமிழ்தம், அமிர்தம்-இவற்றுள் சரியான

சொல் யாது ? - ... ." -

அம்ருதம் என்ற வடசொல்லின் திரிபு இவை. மூன்றும்

சரியே

166. வெயில், வெய்யில்-இந்த இரண்டில் எது சரி :
வெயில் என்பது இலக்கிய வழக்கு; 'என்பி லதனை

வெயில்போலக் காயுமே, அன்பி லதனை அறம்' என்பது குறள். வெய்யில் என்பது உலக வழக்கு. செய்யுளில் உலக வழக்கையும் சிறுபான்மை ஆள்வதனால், வெய்யிற் கேற்ற நிழலுண்டு என்று பாடியவர்களும் உண்டு.

167. ராணி என்பதும் அரசாணி என்பதும் ஒரேபொருளை

உடைய சொற்களா ? அவை எப்படி வந்தன ?

ராஜ்ஞீ என்பது ராஜா என்பதன் பெண்பால். அதுவே

ராணி என்று வந்தது. ராஜா என்பது அரசன் என்று வந்ததுபோல, ராஜ்ஞீ என்பது அரசாணி என்று வந்தது. இரண்டும் ஒரே பொருளையுடைய சொற்களே. -

168. சுறுசுறுப்பு, சுருசுருப்பு-இரண்டையும் எழுதுகிருர்

களே; எது சரி ? -

இரண்டும் சரியே. ஆலுைம் சுறுசுறுப்பு என்ற சொல்

லின் ஒலியிலே சுறுசுறுப்பு இருப்பதனால் அதை வழங்குவது சிறப்பு. -

169. பருந்துகழு கென்று பகர்வர்தமிழ் மக்கள்

இருந்தஇவை ஒன்ரு இரண்டா ?-விரும் தாகத், தப்பிதமில் கட்டுரைகள் தந்த விடைய வனே, செப்புமின் கல்விடையைத் தேர்ந்து.

விடை-4