பக்கம்:விடையவன் விடைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விடையவன் விடைகள்

160. நிரோட்டம், கிரோட்டகம் இவற்றில் சரியான சொல் எது ?

நிரோட்டகம், நிரோட்டம் என்ற இரண்டும் சரி; நீரோட்டம் என்று நெடிலாக்கக்கூடாது. ஒஸ்டம் என்பது உதட்டுக்குப் பெயர். உதட்டுக்கு வேலை இல்லாமல் உச்சரிப் பதளுல் அந்தப் பெயர் வந்தது. நிரோட்டக அந்தாதியை இதழகல் அந்தாதி என்றும் சொல்வார்கள்.

161. மன்றத்துக்கும் கழகத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

இப்போது இரண்டுககும் வேறுபாடு இல்லை. முன்பு மன் றம் என்பது மரத்தடியில் கூடும் இடத்துக்குப் பெயராக வழங்கியது. கழகம் என்பது சூதாடும் இடத்தையும் குறிப் Լյ51.

162. பாட்டுப் பாடுகிருன், பாட்டுப் படிக்கிருன்-இவற். றுள் எது சரி ?

திருநெல்வேலி மாவட்டத்தில் பாட்டுப் படிக்கிருன் என்பது வழக்கில் இருக்கிறது. பாட்டுப் பாடுகிருன் என்பதே. நூல் வழக்கில் வரும். இசைக் கருவியை இயக்கும்போது வாசிக்கிருன் என்பது வழக்கு

163. முட்டைப் பூச்சி, மோட்டுப் பூச்சி இரண்டில் எது gift -

வீட்டின் முகட்டிலிருந்து விழுவதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. முகட்டுக்கு மோடு என்பது ஒரு பெயர்; ஆதலின் மோட்டுப் பூச்சி என்பதே சரியான பெயர்.

164. மட்டுப் பெண், நாட்டுப் பெண்-இரண்டில் எது 夺f ? - - -

மனட்டுப் பெண் என்பதையே அவ்வாறு இருவகையில் வழங்குகிருர்கள். மணம் செய்து அழைத்து வந்த பெண்