பக்கம்:விடையவன் விடைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 39

154. பரிதி, பருதி-இவற்றில் ஞாயிற்றைக் குறிக்கும் சரியான சொல் எது ?

பரிதி என்பது வடமொழிச் சொல்; அதுவே இயல் பானது; அது மாறிப் பருதி என்றும் வருகிறது, இரண்டும் இலக்கியங்களில் வருகின்றன. -

155. கொலை என்பதற்கும் படுகொலை என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

படு என்பது மிகுதியைக் குறிக்க வரும் சொல். படுகுழி, படுபழி என்பன போன்ற தொடர்களில் அந்தப் பொரு ளேயே தருவதைக் காண்க. -

156. தொடங்கும்,. துவங்கும்-இவற்றில் எது சரி ? தொடங்கும் என்பதே இலக்கியத்தில் வருகிறது. உலக வழக்கில் துவங்கும் என்றசொல்லும் வந்துவிட்டது. ஆதலின் இரண்டும் சரியே.

157. அயிராவதம், அயிராவணம் என்னும் இரண்டும் ஒன்ரு ?

அயிராவதம் என்பது இந்திரனுக்குரிய வெள்ளை யானை அயிராவணம் என்பது சிவபெருமானுக்குரிய யானை.

158. பொய்கை, குளம்- இரண்டுக்கும் வேறுபாடு உண்டா ? - ‘. . . . . . . . . . . . .

- பொய்கை என்பது மனிதர் ஆக்காத நீர்நிலை; குளம் மனிதர் வெட்டியது.

- 159. பட்டிமண்டபமா : பட்டி மன்றமா ? எது કાf ?

பட்டி மண்டபத்துப் பாங்கறித் தேறுமின், பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை என்று பழைய நூல்களில் பட்டி மண்டபம் என்ற தொடரே வருகிறது. மண்டபம் என்ப தற்குப் பதிலாக மன்றம் என்று அமைப்பதில் தவறு இல்லை.

மண்டபம் : வடசொல்.