பக்கம்:விடையவன் விடைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விடையவன் விடைகள் -

பந்தம் பறி என்பதே சரி. சிவன் கோயிலில் நடை பெறும் திருவிழா இ று தி யி ல், உமாதேவியார் ஊடல் கொள்ள அதற்கு அடையாளமாகத் தீவட்டிகளாகிய பந் தங்களை அம்மையின் பரிவாரத்தினர் பறித்துச் செல்வதாக நடைபெறும் விழா இது. -

திருமங்கை மன்னன் திருமாலே வழிபறிக்க முயன்றதைக் காட்டும் திருவிழாவுக்கும் அப்பெயர் உண்டு.

149. தமிழ் மணம் கமழ்வது கற்பூரத்திலா, கர்ப்பூரத் திலா?

இரண்டிலும் கமழும். ஆனல், கருப்பூரம் என்பதில்

மிகுதியாகக் கமழும், கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்பது ஆண்டாள் திருவாக்கு.

150. ஆலத்தி, ஆரத்தி - இவற்றில் எது தமிழ்ச் சொல் ? .

ஆரதி என்ற சொல்லின் திரிபே இரண்டும்.

151. இருவருடைய, இருவர்களுடைய-இந்த இரண்டில் எது சரியானது ?

இரண்டும் சரியே. 152. ஆயுள் வேதமா? ஆயுர்வேதமா? இரண்டும் சரியே. ஆயுர்வேதம் என்பது வடமொழித் தொடர். ஆயுள்வேதமென்பது தமிழ் முறைப்படி வந்த

தொடர்.

153. காய்கரி, காய்கறி, கரிகாய், ಹನಿಹTು – இவற்றுள் எது சரி ? -

காய்கறி, கறிகாய் இரண்டும் சரியானவை.