பக்கம்:விடையவன் விடைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 37.

142. தமிழ்ப் புத்தகங்களைப் பொதுவாக ஏன் நூல் என்று. குறிப்பிடுகிருர்கள் ?

நூலேப் போல இருப்பதளுல் அந்தப் பெயர் பெற்றது. அது உவம ஆகுபெயர். பஞ்சினை ஒரு பெண் இராட்டையில் கதிரின் முனை வழியே நூற்றுக் கையால் நூலே உண்டாக்கு வது போல, சொல்லால் புலவன் தன் மதிநுட்பம் கொண்டு: வாயால் நுவல்வதால் உவமையாயிற்று.

143. நாதோபாலனை என்கிருர்களே; அப்படி என்ருல் என்ன ?

நாதம் என்பது இங்கே இசையைக் குறிக்கும். சங்கீதத் தைப் பக்தியுடன் பயின்று அதன் வழியே இறைவனை வழிபடு: வதையே நாதோபாஸன என்று கூறுகிரு.ர்கள்.

144. அக்கசாலை என்பது என்ன ? நாணயம் அச்சடிக்கும் இடம்.

145. லாயக்கு என்பது தமிழா, அல்லது வேறு மொழியா? அதன் பொருள் என்ன ? - .

தக்கது என்னும் பொருளில் வழங்கும் அந்தச் சொல் உருதுவிலிருந்து வந்தது. : & . .

146. திருக்கோயிலூர், திருக்கோவிலூர், திருக்கோவ லூர் இந்த மூன்றில் எது சரி ? х

திருக்கோவலூர் என்பதே சரியான ചന്ദ്രഖക. கோவல் வீரட்டம் என்றும் அத்தலத்துக்குப் பெயர் உண்டு.

147. துளிர் என்று எழுதுவது தவரு ? -

தளிர் என்பதே இலக்கியத்தில் வழங்குகிறது. இப்போது உலக வழக்கில் துளிர் என்று சொல்கிருேம். - -

148. பந்தம் பிரி, பந்தம் பறி-இவ்விரண்டில் எது சரி அது எதைக் குறிக்கிறது?