பக்கம்:விடையவன் விடைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o6 விடையவன் விடைகள்

137. மாந்துதல் என்பதற்கு என்ன பொருள் ?

உண்ணுதல், அநுபவித்தல் என்று பொருள்.

138. சரஸ்வதி என்பதைச் சரசுவதி என்று எழுதுவது போல ராஜேசுவரி என்பதை ராசேசுவரி என்று எழுதுவது சரி தானே ? ராஜேஸ்வரி என்று எழுதலாமா ?

ரா ஜே ச் வரி என்பதுதான். வடசொல்; ஸ் வேறு, ச் வேறு; அதை ராசேசுவரி என்று எழுதுவதே சரி. ராஜேஸ்வரி என்பது தவறு.

139. ஜ்வரம் என்பதற்குத் தமிழ்ச் சொல் எது ?

காய்ச்சல் என்று யாவரும் வழங்கும் சொல்லே தமிழ்ச் சொல்தானே ? வெப்பு நோய் என்றும் சொல்லலாம்.

140. காணுத இடத்தில் பிறரைப் பற்றிக் கூறுவது அசிங்கமல்லவா? என்று சொல்கிருேம். சிங்கம் வீரத்தில் சிறந்தது; அசிங்கம் வீரமில்லாதது என்று பொருள் கொள்ள வேண்டுமா ?

அசங்க்யம் என்பதே மாறி அசிங்கம் என்று மருவியது. சங்கத்தில் அல்லது நாலுபேர் கூடிய இடத்தில் பேசவோ, வெளிப்படுத்தவோ கூ டாத து என்று பொருள்படும். அஸ்ப்யம் என்று சபை யி ல் சொல்லத் தகாதவற்றைக் குறிப்பது வழக்கம். அவையல் கிளவி என்று தமிழில் சொல் வார்கள். . .

141. சலாம், கக்கூஸ், சன்னது என்னும் சொற்கள் எந்த மொழியிலிருந்து வந்தவை? -

சலாம் : உருது; கக்கூஸ் : டச்சு மொழி; சன்னது : உருது. -