பக்கம்:விடையவன் விடைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 35

வளார் என்பது இலக்கியத்தில் வருகிறது. புளியம்:வளா ரால் மோதுவிப்பாய்’ என்பது தேவாரம், அது விளாறு: ஆகி, மிலாறு என்றும் ஆயிற்று.

132. பேட்டி என்பது செந்தமிழ்ச் சொல்லா ? அது உருதுச் சொல்லிலிருந்து வந்தது.

133. முற்றிலும் என்ற சொல் தவரு ? ஏன் ?

முற்றும் என்பதுதான் சரியான சொல். சுற்றிலும் என் பதைப் போல இருப்பதால் முற்றிலும்என்று தவருக எழுதும் வழக்கம் வந்துவிட்டது.

134. தென்றல் என்று ஏன் பெயர் அமைந்தது?

தெற்குப் பக்கத்திலிருந்து வீசுவதால். வடக்கேயிருந்து வீசுவது வாடை, கிழக்கே இருந்து வீசுவது கொண்டல்; மேற். கேயிருந்து வீசுவது கோடை. -

135. ೧೦೯T#೧ಹ೬@ Tirp ೨14 ಹಹy Bri Guಈ கிருேமே; அது எப்படி வந்தது ? - " ...

வினை கெட்டு என்பதே அப்படித் திரிந்தது.

136. தற்குறியென் ருலென்ன ? தண்டமிழி லேஇந்தச்

சொற்குறிக்கும் மானிடர்யார் ? சொல்

லுங்கள்-கற்குறியாய்க் கேட்டாற் பொருளுரைக்கும் கி. வா. ஜ.

- என்றனக்கோர் * * : * - * o பாட்டாற்ரு ருங்கள் பதில்.

தன்னைக் குறிக்கத் தனிப்பேர் அமைந்திருக்க அன்ன தெழுதுதற்கும் ஆற்றலிலான்-துன்னுமொரு கீறலா லேகுறிக்கும் கீழ்மையால் தற்குறியாக் கூறுவா ரென்றறிந்து கொள்.