பக்கம்:விடையவன் விடைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விடையவன் விடைகள்

127. அதிர்ஷ்டம் என்ற வட சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன ?

நல்லூழ் என்று சொல்லலாம்.

128. அருணகிரிநாதர் பாடியுள்ள அந்தோ மனமே" என்ற திருப்புகழில், இந்தா மயில்வாகனர் சீட்டிது' என்று வருகிறது. இதில் சீட்டு என்பது ஆங்கிலச் சொல் அல்லவா ? அவர் காலத்தில் ஆங்கிலம் வழக்கில் இருந்ததா ?

சீட்டு என்பது தமிழ்ச் சொல்தான். அதுவே ஆங்கிலத் தில் சிட் (Chit) என வழங்குகிறது. திருமுகம் அல்லது கடி தத்தைச் சீட்டு என்று சொல்வது வழக்கம். கடிதமாக உள்ள கவிக்குச் சீட்டுக் கவி என்ற பெயர் உள்ளதளுல் இதை அறிய லாம். தீட்டு என்பது கையெழுத்திட்டகடித்த்துக்கு ஆயிற்று; தீட்டுவது தீட்டு. அதுவே சிதைந்து சீட்டு என்று ஆகி விட்டது.

129. தூய்மையானவள் என்று பொருள்படும்படியான

பெண் பெயர் வேண்டும்; வடமொழியானலும் சரி, தமிழாலுைம் சரி; கிர்மலா என்பது போல எதிர்மறை வாய்பாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும்.

புனிதவதி என்ற பெயர் அத்தகையது.

130. இஃது, அஃது என்ற சொற்களை எங்கே பயன் படுத்த வேண்டும் ?

வரும் மொழியில் உயிரெழுத்து முதலில் வரும்போது பயன்படுத்துவது பழைய வழக்கம். உ-ம்: இஃது ஏது ? அஃது. ஆகுமா ?

131 மிலாறு என்னும் சொல் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளதா ? அல்லது பிற்கால வழக்கா? - , o