பக்கம்:விடையவன் விடைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 33

களுக்கும் ஆயிற்று. சகுனம் என்ற வடசொல்லே சொகினம் என்று தமிழில் வந்திருக்கலாம். புள் என்று தமிழில் வழங்கும். -

124. என் கடன் பணி செய்து கிடப்பதே, கடன் பட்டான், காலக் கடன்' என்ற இடங்களில் வரும் கடன் என்ற சொற்களின் பொருளில் உள்ள வேறுபாடு யாது ?

முதலும் மூன்றும் கடமை என்ற பொருளையும், இரண்டு பணத்தைக் கடகைப் பெற்றதையும் சுட்டின. -

125. செண்டாடுவான் சங்கரன்' என்ற வாக்கியம் ஒரு சத்திரத்தின் வெளித் திண்ணையில் கிறுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பொருளிருந்தால் தெரிவிக்கக் கோருகிறேன்.

% செண்டு என்பதற்குப் பூம்பந்து என்று பொருள். அதனை ஆடுவதையே அந்த வாக்கியம் குறிக்கிறது. செண்டு என்பது குதிரைச் சவுக்கையும் குறிக்க வருவதுண்டு.

126. பெண்களுக்கு முக்கியமாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிருர்கள். மடம், பயிர்ப்பு என்பவற்றின் பொருள்

என்ன ? - - . . - -

மடம் என்பதற்குக் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்று பொருள் கூறுவர். யாரேனும் ஒன்றைச் சொன்னல் அதைக் கேட்டுக்கொண்டு, அது தனக்குத் தெரிந் தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் இருத்தல் அது. ஒரு வகை அடக்கம் அது. பயிர்ப்பு என்பது பிற ஆட வரைத் தொடும்படி நேர்ந்தால் உண்டாகும் அருவருப் புணர்ச்சி. . x -