பக்கம்:விடையவன் விடைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விடையவன் விடைகள்

118. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா ?

வட சொல்.

119. குல்லை என்பது எதைக் குறிக்கும் ? துளசியையும் க்ஞ்சாவையும் குறிக்கும்.

120. முகர்தல்' என்று மூக்கின் செயலைச் சொல்கிருர் களே. அது சரியா ?

மோத்தல் என்பதுதான் சரியான சொல். மோப்பக் குழையும் அனிச்சம்’ என்பது குறள். மோந்து பார்ப்பதை மோப்பம் பிடித்தல்’ என்று வழங்குவதனாலும் இதை அறிய லாம். மூக்கே நீ முரலாய் என்று முரலுதல் என்ற சொல்லை அப்பர் இந்தப் பொருளில் வழங்கியிருக்கிரு.ர்.

121. பாம்பென்றும் தாண்ட முடியாது, பழுதை என்றும் மிதிக்க முடியாது’ என்ற பழமொழியில் வரும் பழுதை என்ப தற்குப் பொருள் என்ன ? -

வைக்கோலால் திரிக்கும் கயிற்றுக்குப் பழுதை என்று பெயர். -

122. மகள், மன இவ்விரு சொற்களுக்கும் மனைவி என்ற பொருள் உண்டா ? இதற்கு இலக்கியச் சான்று தருக.

மனக்கினி யாற்குநீ மகளாய தூஉம் என்று மணி மேகலையில் மகள் என்னும் சொல் மனைவி என்ற பொருளில் வந்தது. பிறன்மனை நோக்காத பேராண்மை என்ற திருக் குறளில் மனைவி என்ற பொருளில் மனை என்னும் சொல் வந்தது.

123. சொகினம் என்ற சொல் தமிழ்ச் சொல்ல :

அதுவே மருவிச் சகுனம் என்ற வட சொல்லாயிற்ரு ?

சகுனம் என்ற சொல் பறவைகளால் பார்க்கும் நிமித்

தத்துக்குப் பெயராக வந்து பிறகு எல்லா வகை நிமித்தங்